தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுத்தம் என்பது நமக்கு!

 சுத்தம் என்பது நமக்கு!

 சுத்தம் என்பது நமக்கு!


ADDED : மார் 22, 2026 05:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 05:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும் பவானி ஆற்றில் உள்ள குப்பைகளை, சுத்தம் செய்யும் பணிகளில், எஸ்.எஸ்.வி.எம்., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையத்தில், சரியான பருவமழை பெய்யாததால், நடப்பாண்டு பவானி ஆற்றில், 20 நாட்களாக நீரோட்டம் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. ஆற்றின் ஒரு பகுதியில் மேட்டுப்பாளையம் நகரின் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. பல இடங்களில் ஆற்றில் குப்பை தேங்கியுள்ளன.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகம், ஆற்றில் தேங்கியுள்ள குப்பையை சுத்தப்படுத்த முன்வந்தது. பள்ளி நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, 50 மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள், பவானி ஆற்றில் உள்ள குப்பையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இவர்களுடன், சில சமூக அமைப்பினர் பங்கேற்றனர். மொத்தமாக, 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், பழைய துணிகள் ஆகியவற்றை சேகரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us