/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'துாய்மையே சேவை' விழிப்புணர்வு நிகழ்வு
/
'துாய்மையே சேவை' விழிப்புணர்வு நிகழ்வு
ADDED : செப் 30, 2024 04:17 AM

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், 'தூய்மையே சேவை' என்னும் கருப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரேஸ்கோர்ஸில் உள்ள தாமஸ் பார்க்கில் நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், திட்டத்தை துவக்கி வைத்தார். சென்னை, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் என்.எஸ்.எஸ்., மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா கூறுகையில், ''துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், செப்., 17 முதல் அக்., 2 வரை பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன. 40 லட்சம் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாணவர் வீதம், 2.5 கிலோ பிளாஸ்டிக் கழிவு அல்லது குப்பை சேகரித்து அப்புறப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இதில், துாய்மையை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கல்லுாரி முதல்வர் சிவக்குமார், பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) அண்ணாதுரை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.