ADDED : பிப் 07, 2026 05:08 AM

அ நிறம் | அளவு
சூலூர்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கம், சூலூர் நீர் நிலைகள் இயக்கம், WWF இந்தியா சார்பில், உலக ஈர நிலங்கள் தினம் 2026 ஒட்டி, சூலூர் பெரிய குளக்கரையில் ஒருங்கிணைந்த தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
குளக்கரையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள், பாட்டில்களை, ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரித்து சுத்தம் செய்தனர். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த பிரசாரம் செய்தனர்.
