/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலநிலைக்கு ஏற்ற ஊட்டச்சத்து பயிர்கள்
/
காலநிலைக்கு ஏற்ற ஊட்டச்சத்து பயிர்கள்
ADDED : நவ 06, 2025 11:34 PM
கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் சார்பில், 'காலநிலைக்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த பயிர்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்' என்ற தேசிய பயிலரங்கு நடந்தது.
முன்னணி விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், விவசாயிகள் பங்கேற்று, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற பயிர் பன்முகத்தன்மை மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை ஊட்டச்சத்து பாதுகாப்போடு இணைக்கும் புதுமையான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்கலை பயிர் மேலாண்மை இயக்குநர் (பொ) செந்தில், உணவு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில், கூட்டு ஆய்வுகளின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், முன்னாள் துணைவேந்தர் கீதாலட்சுமி, சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவன நிர்வாக இயக்குநர் ரேகா சின்ஹா, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி கதிர்வேலு, காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

