/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் காலநிலை மாற்ற கருத்தரங்கு
/
வேளாண் பல்கலையில் காலநிலை மாற்ற கருத்தரங்கு
ADDED : நவ 02, 2025 10:18 PM
கோவை: கோவை வேளாண் பல்கலை உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் சார்பில், 'கார்பன் பிடிப்பு மற்றும் நிலைப்படுத்தல்: வேளாண் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான உயிரி தொழில்நுட்ப தீர்வுகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
கோவை, மாரிசிம் பயோ நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் பிரீத்தி பங்கேற்று, கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் உயிரியல் அமைப்புகளின் பங்களிப்பை விளக்கினார். குறிப்பாக, கடற்பாசிகள் மற்றும் பூஞ்சைகளில் மண்வளத்தை மேம்படுத்துவதிலும், மகசூலை அதிகரித்து கார்பன் அளவைக் குறைப்பதிலும் உள்ள பங்களிப்பு குறித்து விளக்கினார்.
தாவர உயிரி தொழில்நுட்ப துறை தலைவர் கோகிலாதேவி, காக்ஸ்பிட் இயக்குநர் செந்தில் உட்பட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

