/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 02, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகள், நாளை மறுதினம் முதல் துவங்க உள்ளன. இதையொட்டி, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது.
கணக்கெடுப்பு படிவம் வழங்குதல், பூர்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெறுதல் தொடர் பான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டார். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு கணக்கெடுப்பு பணி தொடர்பான கையேடுகள், விதிமுறைகள் அடங்கியதொகுப்பு வழங்கப்பட்டது.

