/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலநிலை மாற்றத்தால் பட்டுக்கூடு விலை உயரும்
/
காலநிலை மாற்றத்தால் பட்டுக்கூடு விலை உயரும்
ADDED : ஜூன் 10, 2025 09:33 PM
கோவை பாலசுந்தரம் ரோட்டில், பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுகல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து, விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை பட்டு அங்காடிக்கு மாதம், 25 டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்றுமுன்தினம்தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ, 542 ரூபாய்க்கும், அடுத்த தரம் 424 ரூபாய்க்கும் விற்பனையானது. பட்டு நுால் மார்க்கெட் நிலவரம் ஒரு கிலோ 4,197 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இதனால் பட்டுக்கூடு விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இது குறித்து, பட்டு அங்காடி அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த சில வாரங்களாக வெயிலும், மழையும் மாறி மாறி இருந்து வந்ததால், பட்டுக்கூடு உற்பத்தி குறைந்தது. பட்டுக்கூடு தரமும் குறைந்து காணப்பட்டது.
இப்போது சீதோஷ்ண நிலை மாறி இருப்பதால், பட்டுக்கூடு உற்பத்தியும், விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,' என்றனர்.
-- நமது நிருபர் -