/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் காலநிலை கருத்தரங்கு
/
வேளாண் பல்கலையில் காலநிலை கருத்தரங்கு
ADDED : ஜூலை 30, 2025 08:14 PM
- நமது நிருபர் -
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 'காலநிலை மாற்றத்தில் 'பிக் டேட்டா' எனப்படும் பெருந்தரவுகளைக் கையாளுதல்' என்ற தலைப்பில், கலந்துரையாடல் நடந்தது.
தாவர மூலக்கூறு மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் மையத்தில் நடந்த கலந்துரையாடலில், அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை ஏ.ஆர்.எம்., தரவு மைய இயக்குநர் கிரி பிரகாஷ் உரையாற்றினார்.
காலநிலை மாற்றம் மாதிரியாக்கம், தரவு துல்லியம், மெஷின் லேர்னிங் பயன்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த காலநிலை ஆராய்ச்சி உள்ளிட்டவை குறித்து, மாணவர்கள் கேள்வி எழுப்பி விளக்கம் பெற்றனர். நிகழ்ச்சியில், உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் செந்தில் நடேசன், பேராசிரியர்கள்,மாணவர்கள் பங்கேற்றனர்.