ADDED : மார் 10, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
கோவை: வெள்ளியங்கிரி மலை செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையா தீப அறக்கட்டளை நிர்வாகிகள் கோவை கலெக்டரிடம் அளித்த மனுவில், 'மலை ஏற்றத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சர்க்கரை, இதய நோய் பாதிப்பு உள்ளவர்களை மலை ஏற்றத்துக்கு அனுமதிக்கக் கூடாது. 10 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள், திருநங்கைகளும் மலை ஏற அனுமதிக்கக் கூடாது. விழா காலங்களில் கூடுதல் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என கூறியுள்ளனர்.
