sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாக்கடை அடைப்பால் கொசுவும், காய்ச்சலும்! நகரின் பெரும்பாலான பகுதிகளில் இதுதான் நிலைமை

/

சாக்கடை அடைப்பால் கொசுவும், காய்ச்சலும்! நகரின் பெரும்பாலான பகுதிகளில் இதுதான் நிலைமை

சாக்கடை அடைப்பால் கொசுவும், காய்ச்சலும்! நகரின் பெரும்பாலான பகுதிகளில் இதுதான் நிலைமை

சாக்கடை அடைப்பால் கொசுவும், காய்ச்சலும்! நகரின் பெரும்பாலான பகுதிகளில் இதுதான் நிலைமை


ADDED : ஜன 23, 2024 01:48 AM

Google News

ADDED : ஜன 23, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொசு உற்பத்தி 'படுஜோர்'


கோவை மாநகராட்சி, 82வது வார்டு, கூட்செட் ரோடு, ஓட்டல் ரத்னா ரெசிடன்சி மற்றும் தாம்சன் பர்னிச்சர் அருகில், சாக்கடை கால்வாய் பல வாரங்களாக துார்வாரவில்லை. மண், குப்பை கால்வாய் முழுவதும் நிரம்பி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளது.

- பாலாஜி, கூட்செட் ரோடு.

சீரமைக்கப்படாத ரோடு


ரத்தினபுரி, சாதிக்பாட்சா வீதியில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம், பணிமுடிந்தும் சரிசெய்யவில்லை. பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

- பாலு, ரத்தினபுரி.

குடிமன்களின் கூடாரம்


துடியலுார் பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் இருக்கையில் உட்கார முடியவில்லை. மதுபானம் அருந்திவிட்டு சிலர் நாள் முழுவதும், இருக்கையில் படுத்து உறங்குகின்றனர். பேருந்து நிறுத்தம் முழுவதும் அச்சுத்தமாக இருக்கிறது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மனோகரன், துடியலுார்.

நிரம்பி வழியும் தொட்டிகள்


வடவள்ளி, மகாராணி அவென்யூவில் உள்ள பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குப்பையை அகற்றவில்லை. தொட்டிகளில், குப்பை நிரம்பி வழிகிறது. குடியிருப்பு பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

- சுதர்சனம், வடவள்ளி.

கடும் துர்நாற்றம்


துடியலுார், மேட்டுப்பாளையம் ரோடு, ஆஞ்சநேயர் கோவில், விஸ்வநாதபுரம் அருகே, வாய்க்காலில் கழிவுநீர் விடப்படுகிறது. திறந்தநிலையில் செல்லும் கழிவுநீரால், அருகிலுள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் கடும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும்ஏற்படுகிறது.

- வெங்கட்நாராயணன், துடியலுார்.

நோய்த்தொற்று அபாயம்


குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் - 1 பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் சரிவர துார்வாருவதில்லை. கால்வாய் முழுவதும் குப்பை அடைத்து நிற்கிறது. கால்வாயின் இருபுறமும் களைச்செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் இருப்பதால், நோய்கள் ஏற்படும்அபாயம் உள்ளது.

- அருள் முருகன், குறிச்சி.

சேறும், சகதியுமான ரோடு


செங்காளிபாளையம், விஜய் மில் எதிரே, நியூ பாலாஜி நகர் பேஸ் - 1 பகுதியில், இதுவரை சாலை வசதி அமைக்கவில்லை. மழைக்காலத்தில் மண் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக இருக்கிறது. வாகனங்களின் சக்கரங்கள் அடிக்கடி சேற்றில் மாட்டுகின்றன.

- தங்கவேல், செங்காளிபாளையம்.

7. போக்குவரத்து பாதிப்பு


கணபதி, 20வது வார்டு, பாரதி நகர், எப்.சி.ஐ., சாலையிலிருந்து போலீஸ் குடியிருப்பு செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. வாகனஓட்டிகளுக்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளது. மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

- ராஜா, கணபதி.

இடிந்த சாக்கடை


கோவை மாநகராட்சி, 19வது வார்டு, அலமேலு மங்காபுரம், மூன்றாவது வீதியில், பழையசாக்கடையின் சுற்றுச்சுவர் முழுவதும், இடிந்த நிலையில் உள்ளது. சாக்கடை கால்வாயும் சரிவர துார்வாருவதில்லை. கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

- ராதிகா, மங்காபுரம்.

நோய்த்தொற்று அபாயம்


போத்தனுார், ஜோதி நகர், இரண்டாவது தெருவில் சாலையோரம் அடர் புதர் வளர்ந்துள்ளது. கால்வாய் சரிவர துார்வாராததால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சுகாதாரமற்ற சூழலால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

- உமா மகேஸ்வரி, போத்தனுார்.






      Dinamalar
      Follow us