/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் குழாயில் அடைப்பு; காட்சிப்பொருளான கழிப்பிடம்
/
தண்ணீர் குழாயில் அடைப்பு; காட்சிப்பொருளான கழிப்பிடம்
தண்ணீர் குழாயில் அடைப்பு; காட்சிப்பொருளான கழிப்பிடம்
தண்ணீர் குழாயில் அடைப்பு; காட்சிப்பொருளான கழிப்பிடம்
ADDED : ஆக 20, 2025 09:20 PM
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை அருகே, சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக நகராட்சி சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதனால், உள்ளூர் மக்களும் பயனடைந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லாததாலும், சுகாதார சீர்கேட்டினாலும் பயன்படுத்த முடியாமல், சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்தனர். இது குறித்து, வார்டு கவுன்சிலர் இந்துமதி, நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், சோலையாறு அணைப்பகுதியில் உள்ள கழிப்பிடத்தை பார்வையிட்டார்.
நகராட்சி பொறியாளர் கூறுகையில், ''சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தில் மண் அடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் சப்ளை பாதித்தது. இதனால், கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப்பிரச்னை விரைவில் சரி செய்யப்பட்டு, கழிப்பிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதன்பின், தொடர் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.