/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுடன் முதல்வர் முகாம்; கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
/
மக்களுடன் முதல்வர் முகாம்; கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
மக்களுடன் முதல்வர் முகாம்; கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
மக்களுடன் முதல்வர் முகாம்; கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
ADDED : ஜன 15, 2024 10:18 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில், 2,400 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை, மக்கள் கொடுத்துள்ளனர். இந்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா என, மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரில் மக்களுடன் முதல்வர் என்ற முகாம், ஐந்து இடங்களில் நடந்தன. ஒவ்வொரு முகாமிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மின்சாரம்,காவல்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உள்பட 13 துறைகள் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கோரிக்கை மனுக்களுடன் வந்த மக்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டது. பின்பு கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்திக்கும்படி வழிகாட்டினர். மக்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்ற துறை அதிகாரிகள், 30 நாட்களுக்குள், இந்த கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை நடத்தி, தீர்வு காணப்படும் என கூறினர். நகரில் நடந்த ஐந்து முகாம்களில், 2,400 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்திருந்தனர்.
முதல் நாள் முகம் முடிந்து, 26 நாட்கள் ஆகின்றன. 30 நாளுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா. கொடுத்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா என பொதுமக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.