/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
/
அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
ADDED : நவ 06, 2024 03:18 AM

கோவை; 'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்துக்காக கோவையில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனையில், கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், முதல்வரின் அறிவிப்புகள், சட்டசபை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து, முதல்வர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள் நேரு, வேலு, முத்துசாமி, செந்தில்பாலாஜி, ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.