/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.எம்.எஸ். கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சி.எம்.எஸ். கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 21, 2025 11:26 PM

கோவை; சின்னவேடம்பட்டியில் உள்ள சி.எம்.எஸ். அறிவியல் வணிகவியல் கல்லுாரியில், நடந்த பட்டமளிப்பு விழாவில், 794 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
சி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை தலைவர் கிரீசன் தலைமை வகித்தார்.
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவன துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் பேசுகையில், ''கல்லுாரி நட்புகள் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும். பட்டம் பெற்ற பின் ஆசிரியர்களின் அறிவுரை எப்போதும், மாணவர்களுக்கு வழிகாட்டும்,'' என்றார்.
விழாவில், 794 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில், சிறப்பு அங்கீகாரம் பெற்ற 3 பேர், கல்வி சார் சிறப்பு அங்கீகாரம் பெற்ற 34 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
பாரதியார் பல்கலை மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறை தலைவர் விஜய் ஆனந்த், சி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை துணை தலைவர் சஜீவ்குமார், செயலாளர் சந்திரகுமார், சி.எம்.எஸ். நிறுவன குழும தலைமை நிர்வாக அதிகாரி சந்தியா மேனன், சி.எம்.எஸ். கல்லுாரிகளின் முதல்வர்கள் விமலானந்த், அன்னபூரணி, முகமது அலி உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.