ADDED : பிப் 10, 2026 05:28 AM

அ நிறம் | அளவு
கோவை: சி.எம்.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, வளாக வேலைவாய்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்தியது. கல்லுாரி முதல்வர் சுதா நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
சாப்ட் ஸ்வே டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. கோவை மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த 25 கல்லுாரிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். கார்ப்பரேட் உறவுகளுக்கான மையத்தின் வேலைவாய்ப்பு அதிகாரி ஹரிபிரசாத் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
