/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான கிரிக்கெட் ; கோப்பை வென்றது சி.எம்.எஸ்.,
/
மாநில அளவிலான கிரிக்கெட் ; கோப்பை வென்றது சி.எம்.எஸ்.,
மாநில அளவிலான கிரிக்கெட் ; கோப்பை வென்றது சி.எம்.எஸ்.,
மாநில அளவிலான கிரிக்கெட் ; கோப்பை வென்றது சி.எம்.எஸ்.,
ADDED : பிப் 16, 2024 02:03 AM

கோவை;கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கிருஷ்ணா கல்லுாரி அணியை வீழ்த்தி சி.எம்.எஸ்., அணி கோப்பையை வென்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில் மூன்றாம் ஆண்டாக மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி பிப்., 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இதில் 14 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இதன் இறுதிப்போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மற்றும் சி.எம்.எஸ்., கல்லுாரி அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற கிருஷ்ணா கல்லுாரி அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து 126 ரன்கள் சேர்த்தது. சி.எம்.எஸ்., அணியின் சந்துரு 4 விக்கெட், சஞ்சய் 3 விக்கெட் வீழ்த்தினர்.
கோப்பையை வெல்ல 127 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய சி.எம்.எஸ்., அணியின் துவக்க வீரர் பிரவீன் குமார் (66) அரைசதம் விளாச, அந்த அணி 19.2 ஓவர்களில் நான்கு விக்கெட் மட்டும் இழந்து 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் பரிசுகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் குமரேசன் உடனிருந்தார்.