/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை; இலக்கு ரூ.5.15 கோடி
/
கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை; இலக்கு ரூ.5.15 கோடி
கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை; இலக்கு ரூ.5.15 கோடி
கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை; இலக்கு ரூ.5.15 கோடி
ADDED : செப் 26, 2024 11:52 PM

கோவை : கோவையிலுள்ள, ஐந்து கோ--ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனைக்கான இலக்கு 5.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை நேரு விளையாட்டு அரங்க வளாகத்திலுள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை கலெக்டர் கிராந்தி குமார் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகஅரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை பகுதிகளில் உற்பத்தி செய்து பட்டுச்சேலைகளை வாடிக்கையாளர்களின் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும், 30 சதவீத அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது.
கோவையிலுள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், வண்ணமலர் , ஸ்ரீ பாலமுருகன் கோ -ஆப்டெக்ஸ் ஆகிய ஐந்து கோ-- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் 5.15 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கைத்தறித் துணிகளை வாங்கி பயனடைவதோடு, நெசவாளர்களுக்கு வாழ்வாதாரம் பெருகிட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துவக்க விழாவில், கைத்தறித்துறை உதவி இயக்குநர் வெற்றிவேல், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் ஜெகநாதன், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர்.