/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு சங்க ரேஷன் பணியாளர் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவு சங்க ரேஷன் பணியாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 23, 2024 11:25 PM
கோவை: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, சிங்காநல்லுார் நகர கூட்டுறவு சங்கம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆனந்தன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள், கிராமங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இந்த கடைகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், கட்டுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களின் இருப்பு குறைவு மற்றும் போலி பில் கண்டறியப்பட்டால், பணியாளருக்கு விதிக்கப்படும் அபராத தொகை, இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
புதிதாக விற்பனையாளர்களை தேர்வு செய்வதற்கு முன், ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்களை அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு, பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

