ADDED : டிச 02, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய, 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கொள்ளுப் பாளையத்தில், பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசார் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடப்பதை கண்டு, அனைவரையும் சுற்றி வளைத்தனர்.
மீனாட்சி சுந்தரம், சம்பத்குமார், பார்த்த சாரதி, தனபால், ராம்குமார், ஈஸ்வரமூர்த்தி, திலீப் உள்ளிட்ட, 16 பேரை கைது செய்த போலீசார், 9 ஆயிரத்து, 700 ரூபாய் மற்றும், ஐந்து சேவல்கள், 12 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

