/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலக்காடு எல்லை கிராமங்களில் சேவல் சண்டை தீவிரம்
/
பாலக்காடு எல்லை கிராமங்களில் சேவல் சண்டை தீவிரம்
ADDED : ஜன 16, 2024 10:32 PM

பாலக்காடு;பொங்கல் பண்டிகையை ஒட்டி, பாலக்காடு - -கோவை எல்லை கிராமங்களில் சேவல் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது.
கேரளா எல்லையில், பாலக்காடு மாவட்டம் உள்ளது. இங்குள்ள தமிழக எல்லை கிராமங்களில் மக்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.
வாளையார், கொழிஞ்சாம்பாறை, வேலந்தாவளம், சித்துார், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, நெடும்பாறை, எடுத்தேம்பதி, ஒழலப்பதி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் கலாசார மக்கள், பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.
பண்டிகையை ஒட்டி 'சேவல் கட்டு' என்று அழைக்கப்படும் இந்த போட்டியை, நாட்டில் தடை செய்தாலும் இப்பகுதி மக்கள் ரகசிய மையங்களில் நடத்துகின்றனர். ஜல்லிக்கட்டு போல் சேவல் சண்டை தமிழர்களின் கலாசாரத்தில் ஒரு பகுதியாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத இடத்தில், இந்தப்போட்டியை நடத்துகின்றனர். இதற்காக, தமிழகத்தில் இருந்து சொகுசு கார்களில் சேவல்களை போட்டிக்காக கொண்டு வருகின்றனர்.
பாலக்காடு எல்லை கிராமங்களில், சேவல் சண்டை நடந்து வருகிறது.

