/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் ஊடுபயிராக 'கோகோ' கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு
/
தென்னையில் ஊடுபயிராக 'கோகோ' கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு
தென்னையில் ஊடுபயிராக 'கோகோ' கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு
தென்னையில் ஊடுபயிராக 'கோகோ' கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு
ADDED : மே 20, 2025 11:54 PM

மடத்துக்குளம்; தென்னையில் கூடுதல் வருவாய் ஈட்ட ஊடுபயிராக 'கோகோ' சாகுபடி செய்து பராமரிக்கும் முறை மடத்துக்குளம் வட்டார விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.
மடத்துக்குளம் வட்டாரத்தில், பல்வேறு காரணங்களால், தென்னை சாகுபடி பரப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அமராவதி ஆற்றங்கரையோர விளைநிலங்களிலும், தென்னை நடவு செய்து வருகின்றனர்.
நீண்ட கால பயிராக பராமரிக்கப்படும் தென்னையில், ஊடுபயிராக 'கோகோ' சாகுபடி செய்து கூடுதல் வருவாய் ஈட்டும் முறையை மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். சாக்லேட், ஊட்டசத்து பானங்கள் தயாரிப்பில், முக்கிய மூலப்பொருளாக கோகோ உள்ளது. தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், சாகுபடி பரப்பை அதிகரிக்க, அரசு பல்வேறு மானிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.