/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை சாகுபடி பாதுகாப்பு கருத்தரங்கம்
/
தென்னை சாகுபடி பாதுகாப்பு கருத்தரங்கம்
ADDED : மார் 18, 2025 04:24 AM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறை சார்பில் சோமையனுாரில் தென்னை சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் இன்று நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், தோட்டக்கலைத்துறை, பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பாக தென்னை சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் சோமையனுார் நல்லா கவுண்டர் தோட்டத்தில் இன்று காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை நடக்கிறது.
கருத்தரங்கில் தென்னையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈ மற்றும் வேர்வாடல் நோய் கட்டுப்படுத்தவும் வராமல் தடுப்பது குறித்து தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்ந்த விஞ்ஞானிகள் வாயிலாக பயிற்சியும், செயல்முறை விளக்கமும் வழங்கப்படுகிறது. இதில், விவசாயிகள் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.