sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க மானியம் தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்

/

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க மானியம் தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க மானியம் தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க மானியம் தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்


ADDED : ஜன 16, 2025 11:29 PM

Google News

ADDED : ஜன 16, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; 'மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்வதற்கு கயிறு வாரியம் வாயிலாக கயிறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட வேண்டும்,'' என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு வாயிலாக சிறு, குறு நடுத்தர தொழில்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ளகயிறு வாரிய தலைமை அலுவலகத்தில் மத்திய சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர்ஜித்தன் ராம் மான்ஜி தலைமையில், கயிறு வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது.

அதில், பங்கேற்ற தேசிய தென்னை நார் கூட்டமைப்பினர், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு மானியம் வழங்க வலியுறுத்தினர்.

தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:

கயிறு வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தஆய்வு கூட்டத்தில்,கயிறு வாரியத்தின் சட்ட விதிகள், 1953ல் உருவாக்கப்பட்டது. இன்று வரை எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. அதில், மாற்றம் செய்வது குறித்து உற்பத்தியாளர்கள் சார்பாக, பல ஆண்டுகளுக்கு முன் அமைச்கத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்காக அமைச்சர் தலைமையில் குழு அமைத்து, கயிறு வாரியத்தின் செயலாளர் வாயிலாக நான்கு முறை அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, புதிய சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

தேசிய தென்னை நார் கூட்டமைப்பின் சார்பில், நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்வதற்கு கயிறு வாரியம் வாயிலாக கயிறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட வேண்டும். சீனாவுக்கு ஏற்றுமதியாகும் தென்னை நாரை இங்கு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்து, பருவநிலை மாற்றத்துக்கேற்ப உதவும் வகையில் தென்னை நார் பொருட்கள் உபயோகப்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில், தென்னை நார் துகள் (கோ கோ பித்) வைத்து விவசாயம் செய்வது வாயிலாக, 60 - 70 விழுக்காடு தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

அந்த மண்ணில்லா விவசாய முறையை, விவசாயிகளிடம் பிரபலப்படுத்துவதன் வாயிலாக நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் பராமரிக்க, இயற்கை விவசாயத்தில் விளைந்ததாக ஏற்றுமதி செய்ய முடியும்.

கயிறு வாரியம் அடிக்கடி ஆய்வு கூட்டங்களை நடத்துவதன் வாயிலாக, மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் பயன்பெற முடியும் என, அமைச்சரிடம்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us