/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உச்சம் தொட்டது! ஒரு டன் தேங்காய் சிரட்டை 29,000 ரூபாய்; வரத்து இல்லாததால் விலை கிடுகிடு உயர்வு
/
உச்சம் தொட்டது! ஒரு டன் தேங்காய் சிரட்டை 29,000 ரூபாய்; வரத்து இல்லாததால் விலை கிடுகிடு உயர்வு
உச்சம் தொட்டது! ஒரு டன் தேங்காய் சிரட்டை 29,000 ரூபாய்; வரத்து இல்லாததால் விலை கிடுகிடு உயர்வு
உச்சம் தொட்டது! ஒரு டன் தேங்காய் சிரட்டை 29,000 ரூபாய்; வரத்து இல்லாததால் விலை கிடுகிடு உயர்வு
ADDED : ஏப் 14, 2025 10:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் தேங்காய் வரத்து இல்லாததால், ஒரு டன் தேங்காய் சிரட்டை 29 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த, 25 ஆண்டுகளில் அதிகபட்ச விலையை எட்டியுள்ளது என, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு தெரிவித்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை ஓலை முதல், தேங்காய் சிரட்டை வரை அனைத்தும் பயன் அளிப்பதால், விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.
இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கொப்பரை, தேங்காய்க்கு விலை கிடைக்காத நிலை உள்ளது.
நோய்த்தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களினால் தேங்காய், கொப்பரை, இளநீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால், விலை உயர்ந்து வருகிறது.
தற்போது, ஸ்பெஷல் கொப்பரை கிலோ, 178 ரூபாய்,சாதா கொப்பரை, 172 ரூபாய்; எண்ணெய் ஒரு டின், 3,725 ரூபாய்; பச்சை தேங்காய் ஒரு டன்,, 58,000 ஆகமாகவும், கறுப்பு தேங்காய்,63,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தேங்காய் விலை உயர்வால், கொப்பரை உற்பத்தி செய்ய யாரும் முன்வரவில்லை. தேங்காய் அதிக விலை கொடுத்து வாங்கி, கொப்பரை உற்பத்தி செய்யும் போது, அதன் விலை குறைந்தால் நஷ்டம் ஏற்படும் என உற்பத்தியாளர்கள், கொப்பரை உற்பத்தி செய்ய தயக்கம் காட்டுவதால் அதன் விலை உயர்ந்து வருகிறது.
கொப்பரை உற்பத்தி இல்லாத நிலையில், சிரட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.
சிரட்டை தட்டுப்பாடு
தேங்காய் சிரட்டை, கார்பன் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவை வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆக்டிவேட் கோகோனெட் கார்பன் தயாரித்து, அவை குடிநீர் சுத்திகரிப்பு செய்யும், ஆர்.ஓ., மற்றும் காஸ்மடிக் பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தேங்காய் வரத்து இல்லாததால் சிரட்டை விலையும் வேகமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சீசன் துவங்கியும், கொப்பரை உற்பத்தி செய்ய யாரும் முன்வரவில்லை. கொப்பரை, தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
கொப்பரை உற்பத்தி இல்லாததால், தேங்காய் சிரட்டை பற்றாக்குறையாகியுள்ளது. இதனால், இதன் விலை உயர்ந்து வருகிறது. கடந்தாண்டு, தேங்காய் தொட்டி ஒரு டன், 8,500 ரூபாயாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு டன், 18,500 ரூபாய் வரை விலை உயர்ந்தது.
வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால், அதன் விலை மேலும் உயர்ந்து, ஒரு டன், 29 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த, 25 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு சிரட்டை விலை வேகமாக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரத்தான் வாய்ப்புள்ளது.
ஆக்டிவேட் கோகோனெட் கார்பன் தயாரிப்புக்கு மூலப்பொருளான, தேங்காய் சிரட்டை கிடைக்காததால், கரியின் விலை உயரும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.