ADDED : அக் 29, 2023 12:53 AM

செய்முறை:
முதலில் அரிசி, வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து, இரு முறை தண்ணீர் ஊற்றி அலசிய பின், நல்ல தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளுங்கள். அடுத்து கால் கப் தேங்காய் எடுத்து, துருவி வைக்க வேண்டும். அதேபோல், ஒரு கப் அளவுக்கு தேங்காய் பால் தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கு எடுக்கும் தேங்காயும் இதே போல் மேல் தோலை நீக்க வேண்டும்.
நான்கு மணி நேரம் கழித்து அவலை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் அரிசி, வெந்தயம், துருவிய தேங்காய், அவல் அனைத்தையும் சேர்த்து, கொஞ்சமாக தேங்காய் பால் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு நைசாக அரைக்க வேண்டும். எனவே, இடையிடையே தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றக் கூடாது.
மாவை அரைத்த பின், அதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விடுங்கள். மீதம் இருக்கும் தேங்காய் பாலையும் ஊற்றி, கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்றாக கலந்து எட்டு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். எட்டு மணி நேரம் கழித்து மாவு நன்றாக புளித்து தோசை மாவு பதத்திற்கு வந்திருக்கும்.அடுத்து அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன் மாவை ஊற்றி இதற்கு தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.
தோசை மிகவும் அருமையாக இருக்கும். இந்த தோசையை திருப்பி போடாமல் ஆப்பம் போல ஒரு புறம் மட்டும் ஊற்றி வேக வைத்து எடுங்கள். இந்த தோசைக்கு எல்லாவிதமான சைட் டிஷும் சூப்பராக இருக்கும்.
