/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமையலுக்கு தேங்காய் எண்ணெயா; ஓட்டம் பிடிக்கும் இல்லத்தரசிகள்
/
சமையலுக்கு தேங்காய் எண்ணெயா; ஓட்டம் பிடிக்கும் இல்லத்தரசிகள்
சமையலுக்கு தேங்காய் எண்ணெயா; ஓட்டம் பிடிக்கும் இல்லத்தரசிகள்
சமையலுக்கு தேங்காய் எண்ணெயா; ஓட்டம் பிடிக்கும் இல்லத்தரசிகள்
ADDED : ஜூலை 08, 2025 10:05 PM
கோவை; தேங்காய் எண்ணெய் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சமையலுக்கு பயன்படுத்துவதை பெரும்பாலான இல்லத்தரசிகள் தவிர்த்து வருகின்றனர்.
எண்ணெய் சமையலுக்கு அத்தியாவசியமான பொருள். வீடுகளில், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
அதை தொடர்ந்து, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படும். தற்போது, தேங்காய் எண்ணெய் விலை உயர்வால், அதை பயன்படுத்துவதை குறைத்துள்ளனர்.
பாமாயில், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும், சூரியகாந்தி எண்ணெய் ரஷ்யா நாடுகளில் இருந்தும், அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தேங்காய் விளைச்சல் குறைந்து, அதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால், கொப்பரை விலையும் உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் எண்ணெய் உற்பத்தியில் எதிரொலிப்பதை காண்கின்றோம்.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் இருதயராஜா கூறியதாவது:
தேங்காய் எண்ணெய் தவிர, பிற அனைத்து சமையல் எண்ணெய்களும் 10 முதல் 20 சதவீதம் விலை குறைந்துள்ளது.
ஆனால், தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வழக்கமாக, ஜூலை மாதங்களில் தேங்காய் வரத்து அதிகரித்து விலை குறையும்.
ஆனால், தற்போது வரத்து குறைவு என கூறப்படுகிறது. இதனால், மொத்த விலை, 450 ரூபாய் வரை விற்பனையாகிறது.கடந்த மே இறுதியில், 350 ரூபாயாக இருந்தது தற்போது, 450 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடலை எண்ணெய் 220 ரூபாயாக இருந்தது. தற்போது, 190-200 ரூபாய்க்கும், நல்லெண்ணெய் 320 ஆக இருந்து 300 ரூபாய்க்கும், சூரியகாந்தி எண்ணெய் ஒரே மாதிரி 150 ரூபாய்க்கும், பாமாயில், 140 லிருந்து 130 ரூாய்க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை மேலும், 20 சதவீதம் அதிகரித்து மக்கள் கைகளுக்கு சென்று சேரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இல்லத்தரசி பாரதி கூறுகையில், ''பெரும்பாலும், பாமாயில், சூரிய காந்திஎண்ணெயை பொரிக்க மட்டுமே பயன்படுத்துவோம். தாளிப்பு பயன்பாடுகளுக்கு, தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவோம்.
''தற்போது, சூப்பர் மார்க்கெட்டில் ஒரு லிட்டர் 500 ரூபாய்க்கு மேல் சொல்கின்றனர். இதனால், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மாற்றி, மாற்றி பயன்படுத்துகிறோம். இதுவரை தேங்காய் எண்ணெய் இந்த விலைக்கு விற்றதில்லை,'' என்றார்.