ADDED : செப் 17, 2025 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று வேளாண் விளைபொருட்கள் ஏல விற்பனை நடந்தது.
இதில் 33 ஆயிரத்து 746 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன. ஒரு கிலோ தேங்காய் குறைந்தது 64 ரூபாய் 20 காசு முதல் அதிகபட்சம் 74 ரூபாய் பத்து காசு வரை விற்பனையானது. தேங்காய் கொப்பரை 26 மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. குறைந்தபட்சம் ஒரு கிலோ 170 ரூபாய் முதல் அதிகபட்சம் 241 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம் ஒன்பது லட்சத்து 10 ஆயிரத்து 268 ரூபாய்க்கு விலை பொருட்கள் விற்பனையானது. 57 விவசாயிகள் பங்கேற்றனர். தேங்காய் கடந்த வாரத்தை விட கூடுதல் விலைக்கு விற்றதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.