ADDED : செப் 18, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்களின் வாராந்திர ஏலம் நடந்தது.
தேங்காய் ஒரு கிலோ 43 முதல் 56 ரூபாய் வரையும், தேங்காய் கொப்பரை ஒரு கிலோ 100 முதல் 160 வரையும், தேங்காய் தொட்டி ஒரு கிலோ 35 ரூபாய் வரையும் விற்பனையாயின. மொத்தம் 14 லட்சத்து 36 ஆயிரத்து 764 ரூபாய்க்கு விளைபொருட்கள் விற்பனையாயின; ஏலத்தில் 169 விவசாயிகள் பங்கேற்றனர் என, கோயம்புத்தூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார். தேங்காய் விலை கடந்த வாரத்தை விட குறைந்துள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.
