/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய் விலை ஏலத்தில் குறைந்தது
/
தேங்காய் விலை ஏலத்தில் குறைந்தது
ADDED : மார் 06, 2026 05:25 AM
அன்னுார்: வாராந்திர ஏலத்தில் தேங்காய் விற்பனை விலை குறைந்தது.
அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளை பொருட்களின் ஏல விற்பனை நடத்தப்பட்டது. இதில், 15 ஆயிரத்து 650 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கிலோ குறைந்தபட்சம், 41.50 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 50.89 ரூபாய் வரை விற்பனையானது.
தேங்காய் கொப்பரை, 110 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ குறைந்தபட்சம், 90.50 ரூபாய் முதல், அதிகபட்சம் 176.70 ரூபாய் வரை விற்பனையானது. தேங்காய் தொட்டி, 160 மூட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ, 29.11 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை விட தேங்காய் விலை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் குறைந்தது என, கோவை விற்பனை குழு முதல்நிலை செயலாளர் ஆறுமுக ராஜன், விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்தனர்.

