/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏலத்தில் தேங்காய் விலை கடும் சரிவு
/
ஏலத்தில் தேங்காய் விலை கடும் சரிவு
ADDED : ஆக 13, 2025 09:01 PM
அன்னுார்; ஏலத்தில் தேங்காய் விற்பனை விலை சரிந்ததால் தென்னை விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாராந்திர வேளாண் விளைபொருட்கள் ஏல விற்பனை நேற்று நடந்தது.
இதில் 16 ஆயிரத்து 607 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன. குறைந்தபட்சம் ஒரு கிலோ 51 ரூபாய் 80 காசு முதல், அதிகபட்சமாக ஒரு கிலோ 60 ரூபாய் 29 காசு வரை விற்பனையானது.
இது குறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், 'மூன்று வாரங்களுக்கு முன் ஒரு கிலோ 76 ரூபாய்க்கும், இரண்டு வாரங்களுக்கு முன் 69 ரூபாய்க்கும், கடந்த வாரம் 63 ரூபாய் 26 காசுக்கும் விற்பனையானது.
மூன்று வாரங்களில் ஒரு கிலோவுக்கு 16 ரூபாய் விலை குறைந்துள்ளது. இது ஏமாற்றம் அளிக்கிறது,' என்றனர்.
இதே போல் தேங்காய் பருப்பு 234 கிலோ விற்பனைக்கு வந்திருந்தது. இதில் குறைந்தபட்சம் ஒரு கிலோ 165 ரூபாய் 66 காசு முதல், அதிகபட்சம் 205 ரூபாய் 66 காசு வரை விற்பனையானது. ஏலத்தில் 46 விவசாயிகள் விளை பொருட்களைக் கொண்டு வந்திருந்தனர்.
இத்தகவலை கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன், அன்னுார் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.