UPDATED : நவ 12, 2026 02:17 PM
ADDED : நவ 12, 2026 02:14 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளை பொருட்களின், வாராந்திர ஏலம் நடந்தது. 350 தேங்காய் விற்பனைக்கு வந்தது.
தேங்காய், கருப்பு ரகம் ஒரு கிலோ ரூ.40.40 முதல் அதிகபட்சமாக ரூ.48 வரை விற்றது. தேங்காய் கொப்பரை 120 மூட்டை வந்திருந்தது. ஒரு கிலோ ரூ.105.91முதல்,ரூ.156. 69 வரை விற்றது. தேங்காய் தொட்டி,100 மூட்டை விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ 21.50க்கு விற்றது. ரூ.7,11,277க்கு பொருட்கள் விற்றது. 100 விவசாயிகள் பங்கேற்றனர்.
கோவை விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் தெரிவித்தார். கடந்த வாரத்தை விட தேங்காய் விலை குறைந்தது என விவசாயிகள் கூறுகின்றனர்.
