UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்களின் வாராந்திர ஏல விற்பனை நடந்தது. இதில் 9,600 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன. ஒரு கிலோ குறைந்தது 40 ரூபாய் 10 பைசா முதல், அதிகபட்சமாக 51 ரூபாய் 10 பைசா வரை விற்பனையானது.
தேங்காய் கொப்பரை, 110 மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. ஒரு கிலோ குறைந்தது 100 ரூபாய் 10 பைசா முதல், அதிகபட்சமாக 161 ரூபாய் 29 பைசா வரை விற்பனையானது. தேங்காய் தொட்டி 100 மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. ஒரு கிலோ 20 ரூபாய் 59 பைசாவுக்கு விற்பனையானது.மொத்தம் ஒன்பது லட்சத்து 73 ஆயிரத்து 535 ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனையானது.
இத்தகவலை கோயம்புத்தூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.
