ADDED : நவ 19, 2026 07:28 PM
அ நிறம் | அளவு
அன்னூர்:
அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில், தொட்டிபாளையம் மற்றும் காரனூரில் பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட பொது கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாலுகா அலுவலக வாசலில் சமூக ஆர்வலர் பானு ரமேஷ், இன்று (நவ.,19) காலை உண்ணாவிரதத்தை துவக்கினார்.
இதையடுத்து தாசில்தார் ஜெயபாரதி, துணை தாசில்தார் சசிகுமார் ஆகியோர் இலவச வீட்டு மனை பட்டாவுக்கான இடம், உடனே அளந்து தரப்படும் என உறுதியளித்தனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் மற்றும் ஊராட்சி செயலர் மூர்த்தி ஆகியோரும் போனில் தொடர்பு கொண்டு கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.
அதிகாரிகள் உறுதிமொழியை ஏற்று, பானு ரமேஷ் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இலவச பட்டா பெற்றவர்களும் கலைந்து சென்றனர்.
