ADDED : ஜூலை 17, 2025 10:27 PM
அன்னுார்; அன்னுாரில் ஏல விற்பனையில் தேங்காய் ஒரு கிலோ 72 ரூபாய்க்கு விற்பனையானது.
அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளை பொருட்களின் வாராந்திர ஏல விற்பனை நடந்தது. இதில் ஏழு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 43 ஆயிரத்து 742 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
தேங்காய் ஒரு கிலோ குறைந்தபட்சம் 55 ரூபாய் பத்து பைசா முதல், அதிகபட்சம் 72 ரூபாய் 80 பைசா வரை விற்பனையானது. அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இதுவே தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலை ஆகும்.
தேங்காய் பருப்பு இரண்டு லட்சத்து 63 ரூபாய் மதிப்புக்கு விற்பனையானது. குறைந்தபட்சம் ஒரு கிலோ 185 ரூபாய் முதல், அதிகபட்சமாக 241 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையானது. ஏல விற்பனையில் 79 விவசாயிகள் பங்கேற்றனர்.
இத்தகவலை கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.