/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிலோ தேங்காய் ரூ.64; கொப்பரை ரூ.217; ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம்
/
கிலோ தேங்காய் ரூ.64; கொப்பரை ரூ.217; ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம்
கிலோ தேங்காய் ரூ.64; கொப்பரை ரூ.217; ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம்
கிலோ தேங்காய் ரூ.64; கொப்பரை ரூ.217; ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம்
ADDED : ஆக 25, 2025 09:24 PM

- நிருபர் குழு -
மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோவுக்கு, 64 ரூபாய், கொப்பரை கிலோ 217 ரூபாய்க்கும் விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கொப்பரை மற்றும் தேங்காய் ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 900 கிலோ எடையுள்ள, 1,900 தேங்காய், 12 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், 9 வியாபாரிகள் பங்கேற்றனர். இதில், அதிபட்ச விலையாக ஒரு கிலோ தேங்காய், 64 ரூபாய்க்கும், குறைந்த பட்ச விலையாக, 60.61 ரூபாய் என சராசரியாக, 60 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 55,800 ரூபாயாகும்.
அதே போல், கொப்பரை ஏலத்திற்கு, 11 விவசாயிகள், 11 மூட்டைகளில், 490 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஏலத்தில், அதிகபட்சமாக, ஒரு கிலோவுக்கு, 217 ரூபாய் முதல், குறைந்த பட்சமாக, 200 வரை, என, சராசரியாக, 210 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து, 900 ரூபாயாகும்.
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்த பொருளுக்குரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தேசிய அளவில் வியாபாரிகள் பங்கேற்பதால் கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெகமம் நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், ஏராளமான விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இம்மாதத்தில், 50 கிலோ எடையுள்ள 799 மூட்டைகள் கொப்பரை, 86.16 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
மேலும், முதல் தர கொப்பரை, குறைந்தபட்சம் 200 முதல், அதிகபட்சம் 215 ரூபாய் வரையிலும், இரண்டாம் தர கொப்பரை, 180 முதல் அதிகபட்சமாக 190 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதன் வாயிலாக, 11 விவசாயிகள் மற்றும் 5 வியாபாரிகள் பயனடைந்தார்கள்.
மேலும், விற்பனை கூடத்தில், 2,402 மூட்டைகள் கொப்பரை விற்பனைக்காக உள்ளது. இத்தகவலை நெகமம் விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

