/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை மரக்கன்றுகள் வழங்கிய பா.ஜ.,
/
தென்னை மரக்கன்றுகள் வழங்கிய பா.ஜ.,
ADDED : ஜன 22, 2024 12:12 AM

தொண்டாமுத்தூர்:இருட்டுப்பள்ளத்தில், பா.ஜ., சார்பில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு, இலவசமாக தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பா.ஜ., சார்பில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு, இலவசமாக தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, இருட்டுப்பள்ளம், விநாயகர் கோவிலில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 500 பேருக்கு, இலவசமாக தென்னை மரக்கன்றுகளை வழங்கினார்.
தொடர்ந்து, பா.ஜ.,வினர், விநாயகர் கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், ஆலாந்துறை மண்டல தலைவர் ஜோதி, மண்டல பொதுச்செயலாளர்கள் ரமேஷ், தேவராஜன், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.