தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேங்காய் மட்டை படிகட்டுகள் தென்னை மரத்தில் ஏற 'ஐடியா'

 தேங்காய் மட்டை படிகட்டுகள் தென்னை மரத்தில் ஏற 'ஐடியா'

 தேங்காய் மட்டை படிகட்டுகள் தென்னை மரத்தில் ஏற 'ஐடியா'


ADDED : ஏப் 24, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 06:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை சுற்றுவட்டார பகுதிகளில், தென்னை மரத்தில், தேங்காய் மட்டைகளை படிகள் போல் அமைத்து விவசாயிகள் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மருதுார், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் தென்னை பிரதான விவசாயமாக உள்ளது. தென்னை மரத்தின் மீது ஏறி தேங்காய் இறக்க, தென்னை ஓலைகளில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த மருத்து தெளிக்க என பல்வேறு தேவைகளுக்காக, விவசாயிகள் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, தென்னை மரத்தில் ஏற வசதியாக, கயிறுகளை சுற்றி கட்டி, அதில் தேங்காய் மட்டைகளை படிகள் போல் அமைத்துள்ளனர். இதனால் தென்னை மரத்தின் மீது விவசாயிகள் வேகமாக ஏற முடியும்.

காரமடை வட்டார விவசாயிகள் கூறுகையில், 'தென்னையில் வெள்ளை ஈ வராமல் இருக்க அடிக்கடி மருத்து தெளிக்க வேண்டியுள்ளது. மேலும், தேங்காய் உற்பத்தி அதிகம் வேண்டும் என்றால், அதற்கு ஏற்றார் போல் பூ பிடிக்க சுத்தம் செய்ய வேண்டும். காய்ந்த ஓலைகள் கீழே விழுவதற்கு முன் வெட்டி விட்டால், மழை அல்லது காற்று வீசும் நேரத்தில், விவசாயிகள் மரத்தில் கீழ் பகுதியில் நிற்கும் போது, அவர்கள் மீது விழாது. இதற்காக தென்னை மரத்தின் மீது அடிக்கடி ஏற வேண்டியுள்ளது. இந்த முயற்சி நல்ல பலன் அளிக்கிறது. மரத்தின் மீது ஏறும் நல்ல பிடித்தம் கிடைக்கிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us