/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய் சிறப்பு வேளாண் வளாகம்; கிடப்பில் தமிழக அரசு உத்தரவு
/
தேங்காய் சிறப்பு வேளாண் வளாகம்; கிடப்பில் தமிழக அரசு உத்தரவு
தேங்காய் சிறப்பு வேளாண் வளாகம்; கிடப்பில் தமிழக அரசு உத்தரவு
தேங்காய் சிறப்பு வேளாண் வளாகம்; கிடப்பில் தமிழக அரசு உத்தரவு
ADDED : பிப் 10, 2025 10:43 PM
உடுமலை; 'அதிக சாகுபடி பரப்புள்ள விளைபொருளை எளிதாக சந்தைப்படுத்த, பெதப்பம்பட்டியில் தேங்காய் சிறப்பு வேளாண் வளாகம் துவக்கப்படும்,' என்ற அரசு அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதால் உடுமலை வட்டார விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில், மண் வளம் மற்றும் பாசன திட்டங்களின் அடிப்படையில், மாவட்ட வாரியாக சில வேளாண் சாகுபடிகள் அதிக ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, பிரதானமாக சாகுபடி செய்யப்படும், விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் சில பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
எனவே, இடைத்தரகர்கள் இல்லாமல், மாவட்ட வாரியாக சிறப்பு வேளாண் வளாகங்களை துவக்க, தமிழக அரசின் அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் மாதத்தில், அறிவிப்பு வெளியானது.
'வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித்துறையின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், சிறப்பு வேளாண் வளாகங்கள் செயல்படும்.
திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டியில், தேங்காய்; பொங்கலுாரில் சின்னவெங்காயம் விற்பனைக்காக சிறப்பு வேளாண் வளாகங்கள் துவக்கப்படும்,' என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
தென்னை சாகுபடியில், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் உடுமலை, பெதப்பம்பட்டி வட்டார விவசாயிகள், சிறப்பு வேளாண் வளாகம் அமைக்கப்படாததால், அதிருப்தியில் உள்ளனர்.

