/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாராந்திர ஏலத்தில் தேங்காய் வரத்து சரிவு
/
வாராந்திர ஏலத்தில் தேங்காய் வரத்து சரிவு
ADDED : ஆக 20, 2025 09:53 PM
அன்னுார்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று 44 குவிண்டால் எடையுள்ள 11 ஆயிரத்து 217 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன. குறைந்தபட்சமாக ஒரு கிலோ 55 ரூபாய் 10 காசு முதல், அதிகபட்சம் 62 ரூபாய் 60 காசு வரை விற்பனையானது. கடந்த வாரம், 70 குவின்டால் தேங்காய் வந்திருந்தது. தற்போது வரத்து குறைந்து, விலை சற்று அதிகரித்துள்ளது. தேங்காய் பருப்பு 633 கிலோ விற்பனைக்கு வந்திருந்தது.
குறைந்தபட்சம் ஒரு கிலோ 160 ரூபாய் முதல், அதிகபட்சம் ஒரு கிலோ 214 ரூபாய் வரை விற்பனையானது. 35 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். அடுத்த வாரம் புதன்கிழமை (27ம் தேதி) அரசு விடுமுறை என்பதால், அடுத்த வார ஏலம் 25ம் தேதி நடைபெறும் என முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.

