/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளைச்சல் அதிகரிக்கும் 'தென்னை டானிக்'
/
விளைச்சல் அதிகரிக்கும் 'தென்னை டானிக்'
ADDED : மார் 31, 2025 09:53 PM

பொள்ளாச்சி; தென்னை டானிக் பயன்படுத்துவதன் வாயிலாக, 20 சதவீதம் விளைச்சல் அதிகரிக்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவியியர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இளங்கலை இறுதியாண்டு மாணவியர், பொள்ளாச்சி அருகே சி.கோபாலபுரத்தில் முகாமிட்டுள்ளனர். அங்குள்ள விவசாயிகளிடம், வேளாண் பல்கலையின் 'தென்னை டானிக்' பயன்படுத்தி வேர் ஊட்டம் செய்யும் முறைக்கான செயல்விளக்கம் அளித்தனர்.
அப்போது, 'தென்னை டானிக்' பயன்படுத்துவதன் வாயிலாக, காய்கள் பெரிதாகி, பருப்பு எடை கூடும். விளைச்சல், 20 சதவீதம் அதிகரிக்கும். மேலும், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், குரும்பை உதிர்வது குறையும்.
'தென்னை டானிக்' 40 மில்லியுடன், 160 மில்லி தண்ணீர் கலந்து, 200 மில்லி கரைசலை, ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது, 6 மாதம் இடைவெளியில், வேர் வாயிலாக வழங்க வேண்டும். குறிப்பாக, இளம்சிவப்பு வேரைத் தேர்வு செய்து, வேர் ஊட்டம் செய்ய வேண்டும். வழங்கும் போது, மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும்.
வேர் வாயிலாக 'தென்னை டானிக்' செலுத்திய பின், 45 நாட்களுக்கு பின் அறுவடை மேற்கொள்ள வேண்டும். அல்லது வேர் ஊட்டம் செய்யும் முன்பே காய்களை அறுவடை செய்து கொள்ளலாம், என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.