/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகசூல் அதிகரிக்க தென்னை டானிக்
/
மகசூல் அதிகரிக்க தென்னை டானிக்
ADDED : ஏப் 14, 2025 10:17 PM

பொள்ளாச்சி; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, நான்காமாண்டு இளம் அறிவியல் வேளாண் மாணவிகள், ஊராக வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்திற்காக, பொள்ளாச்சியில் முகாம் இட்டுள்ளனர்.
அவ்வகையில், ஓரக்கலியூர் கிராமம் சென்றனர். தொடர்ந்து, அங்குள்ள விவசாயிகளிடம் தென்னையில் மகசூல் குறைய காரணமான குரும்பை உதிர்தல், பென்சில் முனை குறைபாடு, பூச்சி மற்றும் நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுதல் போன்றவற்றிற்கு நுண்ணூட்ட சத்து குறைபாடே காரணம் என, தெரிவித்தனர்.
மேலும், கோவை வேளாண் பல்கலை வாயிலாக உற்பத்தி செய்யப்பட்ட தென்னை டானிக் பயன்படுத்தி, இவ்வகை குறைபாடுகளை குறைந்த செலவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் விளக்கினர். மேலும், தென்னை டானிக் பயன்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.