/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயரே பறக்குது தேங்காய்; விலை உயர்வால் மகிழ்ச்சி
/
உயரே பறக்குது தேங்காய்; விலை உயர்வால் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 27, 2025 09:43 PM

சூலுார்; சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் துவங்கியது.
சூலுார் திருச்சி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் துவங்கியது. 2,500க்கும் மேற்பட்ட தேங்காய்களை, விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனர். ஏலம் எடுக்க வியாபாரிகளும் வந்திருந்தனர். அதிகபட்சமாக, கிலோ ஒன்றுக்கு, 67 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய்க்கும் தேங்காய் ஏலம் போனது. தற்போதைய சந்தை நிலவரப்படி, அதிகபட்சமான விலை கிடைத்ததாக, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் மற்றும் வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர்.
விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி கூறுகையில், ''சூலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் துவங்கியுள்ளது.
சுற்றுவட்டார விவசாயிகள், வியாபாரிகள் பலர் பங்கேற்று பயன் பெற்றனர். வரும் வாரத்தில் விவசாயிகளின் வருகையும், விளை பொருட்கள் வரத்தும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.