/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை எஸ்டேட்டில் காபி பழ சீசன் துவக்கம்
/
வால்பாறை எஸ்டேட்டில் காபி பழ சீசன் துவக்கம்
ADDED : டிச 19, 2025 07:10 AM

வால்பாறை: வால்பாறையில் முன்கூட்டியே காபி பழ சீசன் துவங்கியுள்ளதால், காபி விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் காபி மட்டும் 4,517 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு காபி செடிகளில் பழங்கள் காய்க்க துவங்கியுள்ளன. இதனால், காபி உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து, தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில், தேயிலைக்கு அடுத்தபடியாக காபி பயிரிடப்பட்டுள்ளது. ரொபஸ்டா, அரபிக்கா காபி வகைகள் பல்வேறு எஸ்டேட்களில் பயிரிடப்பட்டுள்ளன. வழக்கமாக ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் காபி செடிகளில் பூவெடுக்கும். அதன்பின், காய்கள் காய்க்கத்துவங்கும். நவ., முதல் ஜன., மாதம் வரை காபி அறுவடை செய்யப்படும்.
இந்த ஆண்டு சீதோஷ்ணநிலை மாற்றத்தால்,காபி பழ சீசன் துவங்கியுள்ளது. இதனையடுத்து செடிகளிலிருந்து பழங்கள் பறிக்கும் பணி நடக்கிறது. வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் காபி பழ சீசன் நிறைவடையும். காபி விளைச்சலும் அதிகமுள்ளது.
இவ்வாறு, கூறினர்.

