/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - அபுதாபி விமான சேவை ரத்து
/
கோவை - அபுதாபி விமான சேவை ரத்து
ADDED : மார் 02, 2026 05:20 AM
கோவை: ஈரோன் போர் காரணத்தால் கோவை - அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டினர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈரானும் துபாய் உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.
துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது வான் எல்லையை மூடியுள்ளன. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ நிறுவனம் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை வழங்குகிறது. போர் காரணமாக இவ்விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படுகிறது.

