/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - ஆமதாபாத் நேரடி விமான சேவை
/
கோவை - ஆமதாபாத் நேரடி விமான சேவை
ADDED : செப் 30, 2025 11:18 PM
கோவை; கோவையில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு, இண்டிகோ நிறுவனம் இடைநில்லா விமான சேவையை அறிவித்துள்ளது.
வரும் 26 முதல், கோவையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, ஆமதாபாத்துக்கு இரவு 8.10 மணிக்குச் சென்றடையும்.
மறு மார்க்கத்தில், இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.20 மணிக்கு கோவையை வந்தடையும். செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறுக்கிழமைகளில் இந்த இடைநில்லா சேவை வழங்கப் படுகிறது.
இண்டிகோ நிறுவனம், கோவையில் இருந்து சென்னைக்கு 8, பெங்களூருவுக்கு 4, ஹைதராபாத்துக்கு 5, கோவா, புனேவுக்கு தலா 1, மும்பை மற்றும் டில்லிக்கு தலா 2 விமானங்களை இயக்கி வருகிறது. ஆமதாபாத் இண்டிகோவின் கோவையில் இருந்து விமான சேவையில் 8வது இடமாகும்.
இண்டிகோ நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் அபுதாபிக்கு கோவையில் இருந்து நேரடி விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கொழும்புவுக்கான சேவை விரைவில் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஷ் கூறுகையில், “கோவையில் இருந்து தோஹாவுக்கு விமான சேவை வழங்குவது குறித்து, இண்டிகோ நிறுவனம் பரிசீலிக்க வேண்டும்,” என்றார்.