/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - ஜபல்பூர் சிறப்பு ரயில் நேர அட்டவணை வெளியீடு
/
கோவை - ஜபல்பூர் சிறப்பு ரயில் நேர அட்டவணை வெளியீடு
கோவை - ஜபல்பூர் சிறப்பு ரயில் நேர அட்டவணை வெளியீடு
கோவை - ஜபல்பூர் சிறப்பு ரயில் நேர அட்டவணை வெளியீடு
ADDED : அக் 25, 2025 12:31 AM
கோவை: கோவையில் இருந்து ம.பி., ஜபல்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பருவமழை அல்லாத காலத்துக்கான அட்டவணை பின்பற்றப்பட உள்ளது.
வரும் 24ம் தேதி முதல், ஜபல்பூரில் இருந்து , வாரந்தோறும் வெள்ளிக்கிழமை புறப்படும் சிறப்பு ரயில் (எண்:02198), இரவு 11:50 மணிக்கு கிளம்பி, கோவையை ஞாயிறுக்கிழமை மதியம் 2:40 மணிக்கு வந்தடையும்.
மறுமார்க்கத்தில், வரும் 27ம் தேதி முதல், கோவையில் இருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை மாலை 5:05 மணிக்கு புறப்பட்டு, ஜபல்பூரை புதன்கிழமை காலை 8:45 மணிக்குச் சென்றடையும்.
இந்த ரயில், பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, மங்களூரு, மட்கான், ரத்னகிரி, பன்வெல், இடார்சி ஆகிய நிலையங்களில், நின்று செல்லும்.