/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - சிங்கப்பூர் விமான நேரம் மாற்றம்
/
கோவை - சிங்கப்பூர் விமான நேரம் மாற்றம்
ADDED : ஆக 07, 2025 07:00 AM
சென்னை; கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும், இண்டிகோ விமான சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு, 'ஸ்கூட்', 'இண்டிகோ' ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன.
இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்தின், சிங்கப்பூர் விமான நேரம் மாற்றப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு, திங்கள், புதன், வியாழக் கிழமைகளில், இரவு 8:00 மணிக்கு விமானங்கள் இயக்கப்படும். சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு, செவ்வாய்,வியாழன், சனிக்கிழமைகளில், அந்நாட்டு நேரப்படி காலை 4:00 மணிக்கு விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்., மாதத்தில் இருந்து, நேரம் மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளன.