/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - அபுதாபி விமான சேவை வாரத்துக்கு 4 நாட்களாக அதிகரிப்பு
/
கோவை - அபுதாபி விமான சேவை வாரத்துக்கு 4 நாட்களாக அதிகரிப்பு
கோவை - அபுதாபி விமான சேவை வாரத்துக்கு 4 நாட்களாக அதிகரிப்பு
கோவை - அபுதாபி விமான சேவை வாரத்துக்கு 4 நாட்களாக அதிகரிப்பு
ADDED : ஜன 24, 2025 12:17 AM
கோவை; கோவை - அபுதாபி இடையேயான நேரடி விமான சேவை, வாரத்துக்கு நான்கு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை வாரத்துக்கு மூன்று நாள் என்ற அடிப்படையில், 2024 ஆக., 10 முதல், 'இண்டிகோ' நிறுவனம் வழங்கி வருகிறது.
வரும் கோடைகால விமான சேவை அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை வாரத்துக்கு நான்கு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்பட்டு, அபுதாபியை 11:15 மணிக்குச் சென்றடையும். செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
அபுதாபியில் இருந்து திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12:15 மணிக்குப் புறப்படும் விமானம், அதிகாலை 5:45 மணிக்கு கோவை வந்தடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்., 5 முதல் கோவையில் இருந்து வாரத்தின் நான்காவது நாளாக சனிக்கிழமை தோறும் புதிய விமான சேவை வழங்கப்பட உள்ளது. பயணிகளிடம் போதுமான வரவேற்பு இருந்தால், வரும் செப்., முதல் இந்த கூடுதல் விமானம்  நிரந்தரமாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

