/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வேளாண் பல்கலை முதல் 'பேட்ச்' மாணவர்கள் சங்கமம்
/
கோவை வேளாண் பல்கலை முதல் 'பேட்ச்' மாணவர்கள் சங்கமம்
கோவை வேளாண் பல்கலை முதல் 'பேட்ச்' மாணவர்கள் சங்கமம்
கோவை வேளாண் பல்கலை முதல் 'பேட்ச்' மாணவர்கள் சங்கமம்
ADDED : பிப் 22, 2026 05:55 AM

கோவை: கோவை வேளாண் பல்கலையில் படித்த, முதல் 'பேட்ச்' மாணவர்களின் சந்திப்பு நேற்று நடந்தது. இதில், 53 பேர் பங்கேற்றனர்.
கோவை வேளாண் கல்லுாரி, 1971, செப்., 26ல் பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டான, 1968 - 1972, படித்து வெளியேறிய, முதல் வேளாண்மை பட்டதாரி மாணவர்களின் மூன்றாவது சந்திப்பு, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், 53 பேர், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். விழா ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் வரவேற்றார். முன்னாள் மாணவர்களின் அறிமுக உரைக்கு பின், குலுக்கல் முறையில், 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர், பல்கலை துணைவேந்தர் சுப்ரமணியம் பேசுகையில், ''முதல் பேட்ச் மாணவர்களே, இப்பல்கலையின் விதை போன்றவர்கள். இவர்கள் கொண்டு வந்த பல விஷயங்கள், தற்போது விருட்சமாக மாறி, பல மாணவர்கள் படிக்க தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. 58 ஆண்டுகால நண்பர்கள் சந்தித்துக் கொள்வது, பழைய நினைவுகளை பகிர்வது அற்புதமான தருணம்,'' என்றார்.
தங்களுடன் படித்தவர்களில் உயிர்நீத்த, 55 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

