/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முண்டந்துறை அணைக்கட்டில் துார்வாரும் பணி; சிறுதுளி துவக்கம்
/
முண்டந்துறை அணைக்கட்டில் துார்வாரும் பணி; சிறுதுளி துவக்கம்
முண்டந்துறை அணைக்கட்டில் துார்வாரும் பணி; சிறுதுளி துவக்கம்
முண்டந்துறை அணைக்கட்டில் துார்வாரும் பணி; சிறுதுளி துவக்கம்
ADDED : பிப் 22, 2026 05:47 AM
கோவை: சிறுதுளி மற்றும் பிரிக்கால் நிறுவனம் இணைந்து- பேரூர் ஆலாந்துறை பேரூராட்சியிலுள்ள முண்டந்துறை அணைக்கட்டு மற்றும் தொண்டாமுத்துார் ஒன்றியம், மத்வராயபுரம் கிராம ஊராட்சியிலுள்ள சாடிவயல் அணைக்கட்டு பகுதியில் புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சிறுதுளி சார்பில் கூறியிருப்பதாவது: பேரூர் தாலுகா, ஆலாந்துறை பேரூராட்சியிலுள்ள முண்டந்துறை தடுப்பணை திட்டத்தின் கீழ் அணைக்கட்டில் தேங்கியுள்ள மணல் மற்றும் கழிவு அகற்றுதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட நீர் ஊடுருவும் குழாய் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த நடவடிக்கைகள் மூலம், நீர்தேக்கத்தின் அளவு அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு கோடைகாலங்களிலும் போதுமான நீர் கிடைக்க வாய்ப்பு உருவாகும். இதன் விளைவாக அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ள இயலும். பயிரிடும் பரப்பளவு விரிவடையும். நிலத்தின் வளம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

